#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none}

அஸ்ஸலாமு அலைக்கும்


அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் வருகைக்கு நன்றி!

தகவல்


நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரம்


நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர். நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.

பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-

1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :

இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) : நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed)
:
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document
01.07.06 முதல் தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொருதாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.
நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value.
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.
இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.
பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.
முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.
பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.
பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்கவேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.
Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்தமதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

நன்றி: பங்குச்சந்தை இ-லேர்ன்
www.inneram.com



************************************************************************

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! 

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.

***

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

***

ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.

அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.

***

நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.

***

சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.

***

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.

***

உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.

கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.

***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.

******************

*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.

*******************

*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.

ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!

******************

   டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.

*********************

  ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.

ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.

************

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.

***

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

***

ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.

அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.

***

நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.

***

சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.

***

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.

***

உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.

கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.

***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.

********************

*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.

*****************

*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.

ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!

*************

* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும்.

***************

*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.

ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.



*********************************************************************************

                            சில சிந்தனைகள் (பகுதி 1  )

1.நமது மனதில் உள்ளவையே கருத்துக்களாய் வெளிப்படும்.

2.நாம் வாழும் வீடு மட்டுமல்ல, அந்த வீட்டில் வாழும் உறவுகளுக்குள் கூட விரிசல் விழக்கூடாது .

3.சேமிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, வளமையை கொண்டுவர முடியாது.

4.செய்யும் செயலை உறுதியுடன் செய்தால், வெற்றி நிச்சயம்.

5.நோயைக் கண்டுபிடித்தலே, ஆரோக்கியத்தின் ஆரம்பம்.

6.முக்கிய பிரச்சினையில் முடிவு எடுக்குமபோது உணர்ச்சிவசப்பட்டால் புதிதாய் ஒரு பிரச்சினை உருவாகிவிடும்.

7.வர்த்தகத்தில் கால்பதித்து பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அன்னிய ஆளுமைகள் இந்தியாவிற்கு புதிதல்ல.

8.பயத்தைத் தவிர்த்து துன்பத்தை எதிர்கொள்வது மனதை வலுவாக்கும்.

9. கனவில் காணும் உணவு, பசியை போக்காது. உழைத்தால் மட்டுமே உணவு.

10.கொடுக்கிற சம்பளத்திறகு குறையில்லாமல் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு வருபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் பாணம் காஃபிதான்.

11.வஞ்சனையில்லாமல் வேலை செய்தால் மனதில் கலக்கம் இல்லாமல் நிம்மதியாகச் சாப்பிடலாம்.

12.பகலுக்கு விழிகள் உண்டு; இரவுக்கு செவிகள் உண்டு.

13.மௌனம், வியக்கத்தக்க பல அரிய செயல்களை சுலபமாக செய்திடும். பேச்சுக்கலால், சிக்கல் அதிகமாகும்.

14.துயரம் எந்த கடனையும் தீர்த்து வைக்காது. கடன் வரும்முன் சேமிப்போம்.

15.செலவழிக்கும் முன் சம்பாதிப்பவனே அறிவாளி!

16.கடன் வாங்குகிறவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.

17.எந்தச் சொத்தை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; நம்பிக்கையே பெரிய சொத்து.

18.உழைப்பதே உடலின் பயனாகும் -ஜான்சன்

19.இனபத்தின் ரகசியம் உழைப்பேயாகும் -பரோஸ்

20.உழைப்பில்லாதவன் சந்தோஷமாக இருக்க முடியாது -பிஸ்மார்க்


*********************************************************************************





                            சில சிந்தனைகள் (பகுதி 2 )
                             ========================

1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா.

2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்

3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

4.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்

5.பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்

7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே

8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.

9.அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்

10.கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்

11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் - பிட்டின்

12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. - வெர்ஜில்

13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!

14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்

15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் - பிராங்கிளின்


17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் - எமர்சன்

18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்

19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!

20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்



*********************************************************************************




                                                    குப்புறப் படுத்து தூங்கலாமா?

ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கக் கூடாது என்றும் பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கக் கூடாது என்றும் கூறுகின்றார்களே! இதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளதா?
                        எம். அபூபக்ர், திருமங்கலக்குடி

நான் ஸஹர் நேரத்தில் மஸ்ஜிதில் குப்புறப்படுத்துக் கிடக்கும் போது, ஒருவர் காலால் என்னை அசைத்து, இது அல்லாஹ்வை கோபம் கொள்ளச் செய்யும் படுக்கையாகும்” என்று கூறினார். நான் (விழித்துப்) பார்த்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: யயீஸ் பின் தஹ்ஃபா பின் கைஸ் அல்கிஃபாரி (ரலி)
 நூல் : அபூதாவூத் (5040)

   இந்த ஹதீஸின் அடிப்படையில் குப்புறப் படுப்பதற்குத் தடை உள்ளது. ஆனால் பெண்கள் நிமிர்ந்து படுப்பதற்குத் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக நபி (ஸல்) அவர்கள் வலதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி)    நூல் : புகாரி (247)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது நபிவழி என்பதை அறியலாம். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

மருத்துவ சோதனை, மருத்துவரின் ஆலோசனை போன்ற காரணங்கள் இருந்தால் அல்லது குப்புறப்ப்டுக்கும் தேவை இருந்தால் அது இவர்களைக் கட்டுப்படுத்தாது.

மேலும் ஒருக்களித்து படுத்த பின் தூக்கத்தில் ஒருவர் இயல்பாக குப்புறப்படுத்தால் அதையும் கட்டுப்படுத்தாது.        www.onlinepj.com

 சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று,

சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும்.  தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது.அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். எப்போதும், (சுபுஹு தொழுகையை தினமும் ஜாமாத்துடன் தொழ தவறிவிடாதீர்கள்)  இரவில் மட்டுமே தூங்க வேண்டும்.
கவிழ்ந்து படுக்க கூடாது : கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

 நழுவும் அப்பாக்களும்,  தள்ளிவிடும் அம்மாக்களும் !

இந்த காலத்து குழந்தைகள் நம்மைவிட மகா புத்திசாலிகள் என்று அலுத்துக் கொள்ளும் பாணியில் பெருமை பாராட்டாத பெற்றோர் யார் இருக்கிறார்கள். குறிப்பாக அம்மாக்கள். அதெல்லாம் பார்வைக்குதானாம். வாண்டுகள் வாய் ஓயாமல் கேட்கும் கேள்விகளால் மனதுக்குள் புழுங்கி, மவுனமாக சினந்து, சுய பச்சாதாபத்துக்கு ஆளாகும் பெற்றோர் அதிகம் என்று ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.

தெரிந்த உண்மைகள்கூட  ஆய்வுகள் துணையோடு அரங்கேறும்போதுதான் நிஜமான உண்மை என்ற அங்கீகாரம் கிடைக்கிறது.  தாங்கள் பள்ளி சென்ற காலத்தில் அறிவியலை கணிதத்தை இவ்வளவு  விவரமாக ஆசிரியர்கள் சொல்லித் தரவில்லை என்று ஆய்வுக்கு வந்தவர் காதில் பூ சுற்றியுள்ளனர் பல பெற்றோர். எங்கள் காலத்தைவிட அறிவியலும் கணிதமும் இப்போது மாறியிருக்கிறது என்று சிலர் சான்றளித்துள்ளனர்.

வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது? வேற்று கிரகத்து ஆட்களை எப்போது சந்திப்போம்? தண்ணீர் ஏன் ஈரமாக இருக்கிறது? மழை பெய்யும்போது வண்டுகள் எல்லாம் எங்கே தங்கும்? ஒவ்வொரு நாட்டிலும் கடிகாரம் ஏன் வெவ்வேறு நேரம் காட்டுகிறது? வானவில்லில் எப்படி  கலர் வருகிறது? & இப்படியான கேள்விக்கணைகள் துளைக்கும்போது பெற்றவர்கள் மிரண்டு போகிறார்கள்.

பிசியாக இருக்கிறேன். அம்மாவிடம் கேளேன்’ என்று நழுவும் அப்பாக்கள்; ‘பெண்களுக்கு அறிவியல் சுருக்கமாகதான் நடத்துவார்கள். அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்’ என்று தள்ளிவிடும் அம்மாக்கள். மனதில் தோன்றியதை பதிலாக சொல்லி சமாளிக்கும் பெற்றோர்.  இதுக்கெல்லாம் விடையே கிடையாது என்கிற அதிரடி பெற்றோர். இந்நிலையில் குழந்தைகள் எங்கே விடை தேடும்?

விடைகளை கண்டுபிடிக்க விரல் நுனியில் வசதிகள் வந்துவிட்ட சூழலில் அதனை பயன்படுத்தி குழந்தைக்கு பதிலளிக்கும் பெற்றோர் குறைவு. ஆனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி அதிகம். கணிதமும் அறிவியலும் மனிதகுல முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான அறிவுப்பாதை. அடுத்த தலைமுறையை அதில் கைபிடித்து அழைத்துச் செல்லாவிட்டாலும், ஒதுங்கி நின்று வழிகாட்டும் கடமையை மட்டுமாவது பெற்றோர் மறக்காமல் செய்வதுதான் நல்லது.


0 comments: