#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none}

அஸ்ஸலாமு அலைக்கும்


அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் வருகைக்கு நன்றி!

Sunday, March 10, 2013


    சுய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

    காரைக்கால்:  பிரதமரின் சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின் மூலம், சுய தொழில் தொடங்க, காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு, ஆட்சியர் அசோக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
"காரைக்கால் மாவட்டத்தில் படித்து வேலை கிடைக்காத நபர்களுக்கு, சுய தொழில் தொடங்க, பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் வங்கிகளில் தொழில் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், புதுச்சேரி மாநிலத்தில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்து வருபவராகவும் இருக்கவேண்டும்.

சேவை அடிப்படையான தொழிலுக்கு ரூ.5 லட்சமும், உற்பத்தி அடிப்படையிலான தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் கடன் பெறலாம். கல்வித்தகுதி தேவையில்லை. இரு பிரிவுக்கும் அதற்கு மேல் கடன்பெற வேண்டுமெனில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இந்த திட்டத்தின் மூலம் கடன்பெற விரும்புவோர் காரைக்கால் நகராட்சி எல்லைகுட்பட்டவர்கள், கோட்டுச்சேரி மாவட்ட தொழில் மையத்திலும், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு, திரு-பட்டினம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்டவர்கள் கீழ ஓடுதுறை, அம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள புதுச்சேரி கதர் கிராம மற்றும் கிராமத்தொழில்  வாரியத்திலும் வேலை நாட்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து வருகிற 13.03.2013-க்குள் சமர்பிக்கவேண்டும்.

வேறு ஏதாவது சந்தேகங்களுக்கு, 266467, 222620 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்". இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 சுய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு [9535] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com  10-3-2013

0 comments: